Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்…. ரிலீஸ் ஆவதில் சிக்கல்…!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமானது ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படங்கள் வரும் பொங்கலையொட்டி வெளியாக உள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கையை அனுமதிக்குமாறு நடிகர் சிம்பு மற்றும் விஜய் முதல்வர் எடப்பாடிஇடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து திரையரங்குகளில் 100 தனது இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வந்தன. எனவே இந்த முடிவை ரத்து செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இதனால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எந்த நிலையிலும் ஈஸ்வரன் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஆனால் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்தால் மாஸ்டர் படத்தை திரையிடும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50% இருக்கைகளோடு  திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி அங்கு நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கடந்த மே மாதமே திரைக்கு வரவேண்டிய இருந்த மாஸ்டர் படம் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து 13ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

எனவே இதுகுறித்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கலந்த  எதிர்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் சோகத்தில் இருக்கின்றனர். ஏனெனில் கேரளாவில் திரையரங்குகளை திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்தும் திரையரங்கு உரிமையாளர்கள் முன்வரவில்லை. ஏனென்றால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றும் திரையரங்கு மூடப்பட்டிருந்த நாட்களில் மின்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாஸ்டர் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |