‘மாஸ்டர்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். கடந்த ஜனவரி மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான படம்” மாஸ்டர்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்து வெற்றியடைந்தது.
இதையடுத்து, இந்த படம் உலக அளவில் 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனன் இந்த படம் பற்றி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில்,” இந்த படத்தால் எனக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. மேலும், இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும்” இவர் கூறியுள்ளார்.