விவேக்கின் மறைவிற்கு நடிகர் விஜயின் தாய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் இன்று காலை 4:35 மணியளவில் உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல திரைப்பிரபலங்கள் விவேக்கின் உடலை நேரில் வந்து பார்த்து அஞ்சலி செலுத்தினர்.
சில திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தின் மூலமாக தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் தாய் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்திற்கு ஜார்ஜியா சென்றுள்ளதால் அவரால் விவேக்கின் உடலிற்கு நேரில் அஞ்சலி செலுத்தமுடியாமல் போயுள்ளது.
விவேக்கின் உடலுக்கு நடிகர் விஜய் அம்மா நேரில் அஞ்சலி செலுத்தினார்#Vivek #Vijay pic.twitter.com/8ozjE9EFP6
— Velmurugan Paranjothi / வேல்முருகன் பரஞ்சோதி (@Vel_Vedha) April 17, 2021