Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் கோரிக்கையை…. முதல்வர் நிராகரித்தார்…? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!

திரையரங்கில் 100% இருக்கை குறித்த விஜய்யின் கோரிக்கையை முதல்வர் நிராகரித்துள்ளாரா என்று கேள்வி எழும்பியுள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸில் திரையரங்கில் 100 சதவீத இருக்கைகளுடன்  பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தமிழக திரையரங்குகளில் மீண்டும் கலாச்சாரம் துளிர்க்க உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். மேலும் நடிகர் தனுஷும் விஜய் படத்துக்கு ஆதரவு தெரிவித்து படத்தை பார்க்குமாறு கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜன்னவரி -31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து திரையரங்கில் 100% இருக்கைகள் தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே விஜய்யின் கோரிக்கையை தமிழக முதல்வரால் நிராகரிக்கப்பட்டு விட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |