விஜயின் சூப்பர் ஹிட் பாடலை தல அஜித் மீண்டும் போட சொல்லி கேட்டு ரசித்தார் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய் தளபதி விஜய்யின் தலைவா படத்தை இயக்கும்போது மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது அதே ஹோட்டலில் ஆரம்பம் படத்திற்காக நடிகர் அஜித்தும் தங்கியிருந்தார். இதனை அறிந்த ஏ.எல்.விஜய் அஜித்திடம் சென்று தலைவா படத்தின் போஸ்டரையும் அப்படத்தில் இடம் பெற்றிருந்த வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலையும் போட்டுக் காட்டியுள்ளார்.
அந்த பாடலை கேட்ட அஜித் மீண்டும் அப்பாடலை போட சொல்லி விரும்பிக் கேட்டார் என்று ஏஎல் விஜய் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நடிகர் அஜித் இந்த பாடல் கண்டிப்பாக மிக பெரிய ஹிட் ஆகும் என்றும் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.