Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் ‘மாஸ்டர்’… இணையத்தில் லீக் ஆனது எப்படி ?… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படம் இணையத்தில் கசிந்தது எப்படி ? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாஸ்டர். நாளை இந்தப் படம் திரையரங்குகளில் மிக பிரமாண்டமாக வெளியாகவுள்ளது . இந்நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் காட்சிகள் பல இணையத்தில் லீக் ஆகியுள்ளது . திரையரங்குகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் போல இருந்த அவை டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது. இதனை அறிந்த படக்குழு உடனே ட்விட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்து அந்த காட்சிகளை பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது . இதன் பின் உடனடியாக சட்டவிரோதமாக காட்சிகளை பெறுபவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டது . இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாடுகளுக்கு வினியோகம் செய்வதற்காக சில தனியார் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு மாஸ்டர் படம் கொடுக்கப்பட்டிருக்கிறது . வெளியான காட்சிகள் திரையரங்கில் எடுக்கப் பட்டது போல் இருந்ததால் எந்தெந்த நிறுவனங்களிடம் திரையரங்குகள் உள்ளது என ஆராயப்பட்டது.

Thalapathy Vijay's Master: Makers to release new promos every evening till  the film is released | PINKVILLA

இதில் இலங்கையில் வினியோகம் செய்வதற்காக ஒரு டிஜிட்டல் நிறுவனத்திடம் திரைப்படம் கொடுக்கப்பட்டு அதில் இருந்து காட்சிகள் லீக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதன்படி வெளியான காட்சிகளில் இருக்கும் திரையரங்கமும் அந்த நிறுவனத்தின் திரையரங்கும் ஒரே மாதிரி இருப்பதால் அவர்களிடமிருந்து தான் காட்சி லீக் ஆனது  உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியர் ஒருவர் திருட்டுத்தனமாக காட்சிகளை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது தெரியவந்தது. இதனால் அந்த நபர் மீதும் அந்த டிஜிட்டல் நிறுவனத்தின் மீதும் புகார் அளிக்க உள்ளதாக தயாரிப்பாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |