தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியில் ஒளிபரப்பாகும் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா ஆகியோர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பின்னணிகள் பாட ஓட முன்னாள் இருவரும் சொல்லும் வார்த்தைகளை சரியாக கேட்டு பின்னால் இருப்பவர்களுக்கு கடத்த வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதில் முன்னாள் இருந்த சோபிதா குர்தா என்ற வார்த்தையை சொல்ல அதே த்ரிஷா பின்னால் இருந்த விக்ரமுக்கு சொல்ல முயன்றார். ஆனால் திரிஷாவின் உதட்டசைவை பார்க்க ஏதோ கெட்ட வார்த்தை பேசுவது போல இருந்தது. இதை கண்டதும் விக்ரம் அதிர்ச்சியை ஆகும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1577162685044912128