விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தயாரிக்க உள்ள புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றார். இவர்கள் தயாரிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண், கூழாங்கல் ஆகிய திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது .
Happy to launch the title of a very cute love story #WalkingTalkingStrawberryIcecream@vinayakv_ a superb talent debuts as director, produced by @Rowdy_Pictures @VigneshShivN #Nayanthara who always pick up and make superb content!
All the best for yet another super success 😀 pic.twitter.com/eXwpWVeKf2— Anirudh Ravichander (@anirudhofficial) February 15, 2021
மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை தயாரித்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா இணைந்து தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது . அறிமுக இயக்குனர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் .