Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ‘கூழாங்கல்’… சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது…!!!

விக்னேஷ் சிவன் , நயன்தாரா தயாரிப்பில் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ள ‘கூழாங்கல்’ படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகியாக வலம் வரும் நயன்தாராவும் அவரது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி சில படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர் . சமீபத்தில் இவர்கள்  ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தின் உரிமையை கைப்பற்றினர் . பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார் .

 

கூழாங்கல் பட போஸ்டர்

கடந்த சில தினங்களுக்கு முன் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல்  திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் விக்னேஷ் சிவன் ,நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் . இந்நிலையில் விக்னேஷ் சிவன் ‘கூழாங்கல்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் டைகர் விருது வெல்லும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |