இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் பட நடிகர் இணைந்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்தப் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி , நடிகைகள் நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர் . கடந்த வருடம் காதலர் தினத்தில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை . இதையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விஜய் சேதுபதி , சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஷீகான் ஹூசைனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இவர் நடிகர் விஜயின் ‘பத்ரி’ படத்தில் பாக்ஸிங் கோச்சாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.