விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் நடிகர், நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ,சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் படங்களை இயக்குவது மட்டுமல்லாது பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் தனது காதலியும் நடிகையுமான நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ராக்கி ,நெற்றிக்கண் ,கூழாங்கல் ஆகிய படங்களை தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விநாயக் இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சூரரைப்போற்று படத்தில் பைலட்டாக நடித்த கிருஷ்ணகுமார் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் , பிரபல பாடகி ஜொனிதா காந்தி கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாடகி ஜொனிதா பாடிய டாக்டர் படத்தின் ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.