Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார் விக்ரம் பிரபு…. அனைவரும் அறிவுறுத்தல்….!!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பிரபல நடிகர் விக்ரம் பிரபு அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா முழுவதும் வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி இருக்கும் இவ்வேளையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் தங்களுக்கான தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் பிரபு தனக்கான கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் விக்ரம் பிரபு

Categories

Tech |