Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடிக்கும் ”விக்ரம்”…. வெளியான புதிய அப்டேட்….!!!

‘விக்ரம்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூன்று பேரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ”விக்ரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

?Official : Vikram Movie Official First look Poster | Kamal Haasan |  Fahadh Faasil |Vijay Sethupathi - YouTube

இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 17ஆம் தேதி கோவையில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படப்பிடிப்பில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் மூன்று பேரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |