“விக்ரம் வேதா” பாலிவுட் ரீமேக்ஸில் சைப் அலி கானும், அமீர்கானும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்ட திரைப்படம் விக்ரம் வேதா.இப்படத்தில் மாதவன், விஜய்சேதுபதி, கதிர் ஜான் விஜய், வரலட்சுமி சரத்குமார், ஷத்தாத் ஸ்ரீநாத் , பிரேம், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் . இப்படம் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பாலிவுட்டிலும் ரீமேக்காக இருப்பதாக கூறப்படுகிறது .
இப்படத்தில் மாதவன் கதாப்பாத்திரத்தில் சைப் அலி கானும் , விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க விருப்பதாக தகவல் கசிந்துள்ளது . மேலும் , குறிப்பாக தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி இதை பாலிவுட்டிலும் ரீமிக்ஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளது . இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 2020இல் தொடங்கி அந்த ஆண்டின் இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என திட்டமிட்டுள்ளனர்.