விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது லக்சரி பட்ஜெட் டாஸ்காக டிவி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அணிக்கு விக்ரமன் மற்றும் ரட்சிதா கேப்டன் ஆகவும், மற்றொரு அணிக்கு வேடிக்கை மற்றும் மகேஸ்வரி கேப்டனாகவும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோவானது தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விக்ரமன் தன்னிடம் பர்சனல் ஆன பகையை மணிகண்டன் காட்டுவதாக கூறுகிறார்.
உடனே மணிகண்டன் உங்களை எனக்கு முன் பின் கூட தெரியாது நான் எதற்காக உங்களிடம் பர்சனல் பகையை காட்ட வேண்டும் என்று கோபத்தில் கொந்தளிக்கிறார். அதோடு என்னை மட்டும் தான் எப்போதும் டார்கெட் செய்கிறீர்கள் என்றும், கமல் சாரிடமும் என்னைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்களை வைத்துள்ளீர்கள் என்றும் மணிகண்டன் கூறினார். ஆனால் மணிகண்டன் திருநங்கையான ஷிவ்வினை கேலி செய்ததற்காக தான் கமல் எச்சரித்தார். ஆனால் மணிகண்டன் விக்ரமன் தான் எச்சரிக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் சக போட்டியாளர்கள் வந்து சண்டையை சமாதானம் செய்து வைக்கிறார்கள். இந்த புரோமோ வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.