விளை நிலங்களுக்குள் ஒற்றை யானைகள் புகுந்து நெற்பயிர்களை அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனச்சரகத்தை ஒட்டி ஆந்திர மாநில வனச்சரகம் அமைந்துள்ளது. அங்கிருந்து யானைகள் கூட்டம் கூட்டமாக தமிழக எல்லைப்பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை அறிந்த வனத்துறையினர் யானைகள் கூட்டத்தை விரட்டி அடிக்கின்றனர். ஆனாலும் ஒற்றை யானை ஒன்று அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மோடிக்குப்பம் பகுதியில் நவீன் என்பவரது விளை நிலங்களுக்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்து ஏராளமான நெற்பயிர்களை சேதப்படுத்தியது.
அதே பகுதியில் வசிக்கும் சீதாராமன் என்பவரது வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து ஏராளமான வாழைகளையும் சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் மேளங்கள் அடித்தும் பட்டாசுகளை வெடித்தும் அங்கிருந்து காட்டுப்பகுதிக்குள் விரட்டி உள்ளனர்