கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேஸ், டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தாந்தோணி மலையில் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி உள்ளார்.
அதன்பின் முன்னாள் நகர தலைவர் சுப்பன், கட்சி நிர்வாகிகள் சின்னையன் மற்றும் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி உள்ளனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மணி அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.