விவசாய தோட்டத்தில் புகுந்து தென்னை மற்றும் வாழை சாகுபடியை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள அடவிநயினார் அணைக்கு செல்லும் பாதையில் இருக்கும் விளை நிலங்களில் வாழை மற்றும் தென்னை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் இங்கு பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களை காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகிறது. இவ்வாறு காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் நுழைந்து விடுகிறது. எனவே அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.