சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முகமது அலி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு முத்துவாப்பா என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் முத்துவாப்பா அதே பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை விளையாடுவதற்காக அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அந்த சிறுமி அழுது கொண்டே அங்கு நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த காவல்துறையினர் உடனடியாக முத்துவாப்பாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.