மினி லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மோகன் தனது தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் என்பவர் மோகன் விளையாடிக்கொண்டிருந்ததை பார்க்காமல் தனது மினி லாரியை பின்னோக்கி இயற்றியதாக கூறப்படுகின்றது.
இதில் மோகனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.