விளையாட்டு வீரர் , வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, முன்னாள் தடகள வீராங்கனையான பி. டி. உஷா கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பதிவில், நடைபெற இருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளில் பல வீரர் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் உதவி நிர்வாகிகள் அகியோர் பங்கேற்பார்கள் .
இதனால் தடுப்பூசி செலுத்துவதில் இவர்களுக்கு ,முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேரளா முதலமைச்சருக்கு தாழ்மையான வேண்டுகோள் விடுக்கிறேன். விளையாட்டுத் துறையை நாம் , புறக்கணித்துவிட முடியாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கேரளா முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கும் பி. டி. உஷா, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் .