Categories
மாநில செய்திகள்

இனி இவங்களுக்கெல்லாம் விளையாட்டு சங்கங்களில் இடமில்லை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில்  வட்எறிதல் வீராங்கனை நித்யா தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தமிழ்நாடு தடகள விளையாட்டு சங்கம் அனுமதி மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஜனவரி 19ஆம் தேதி நீதிபதி  ஆர் மகாதேவன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது  விளையாட்டு சங்கங்களில்  நிர்வாகிகளாக  விளையாட்டு வீரர்களே இருக்க வேண்டும். அதில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் நியமிக்க கூடாது என்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க செயலாளர் சார்பில்  தனி நீதிபதியின் இந்த தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கினை தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த  விசாரணையில்  நீதிபதிகள் கூறியதாவது. ” உத்தரவில் என்ன தவறு உள்ளது. விளையாட்டு சங்கங்களில் அரசியல்வாதிகளுக்கு என்ன தொடர்பு. அவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான வசதிகளை பறித்து செல்லவே விளையாட்டு சங்கங்களுக்கும் நுழைகின்றனர்.

இதனைத் தொடர்ந்து  தேசத்துக்காகவும், மாநிலத்துக்காகவும், அணிக்காகவும்  விளையாடும் வீரர்களை மிக மோசமான முறையில் நடத்தப்படுவதில்லை மற்றும்  போட்டிகளில் கலந்து கொள்ள செல்லும் வீரர்களுக்கு முறையான வசதிகள் செய்து கொடுப்பதில்லை. மேலும் சங்கங்களில் பணிபுரியும் பயிற்சியாளர்களின்  நடத்தை குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியவில்லை. அரசியல் கட்சியை சேர்ந்தவர்களை  விளையாட்டு சங்கங்களுக்கு தலைவராக நியமிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களாக இல்லாதவர்களை ஏன் சங்கங்களில் நுழையவேண்டும். தனி நீதிபதியின் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர். மேலும் அவர்கள் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர்.

Categories

Tech |