கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வட்டம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாக தாலுகா அலுவலகத்தில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கியுள்ளார். இதில் அமைப்பு செயலாளர் பெரியதமிழன், ஒருங்கிணைப்பாளர் வினோத், வட்ட பொருளாளர் பரக்கத்துன்னிஷா மற்றும் மாவட்ட துணை தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளராக ஆனந்தன் வரவேற்றுள்ளார்.
அதன்பின் மாவட்ட செயலாளர் வரதராஜன் சிறப்புரை ஆற்றியுள்ளார். இதனை அடுத்து மூன்று வருடங்கள் பணி முடித்த நிலையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கு உடனடியாக பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டிடம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், புள்ளி விவரங்கள் எடுக்க கால அவகாசம் இன்றியும், வழிகாட்டு நெறிமுறைகள் இன்றியும், ஒரே வேலையை பலமுறை செய்ய சொல்லும் மாவட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.