Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இந்த வாய்ப்பை விட மாட்டோம்” சிரட்டையில் கைவினை பொருட்கள்…. அசத்திய கிராமப்புற பெண்கள்…!!

சிரட்டை மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் கைவினைப் பொருட்களை தயாரித்து கிராமப்புற பெண்கள் அசத்தியுள்ளனர்.

தற்போதைய காலகட்டங்களில் பிளாஸ்டிக் அல்லாமல் பிற பொருட்களை கொண்டு கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு உறுதுணையாக மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து கைவினைப் பொருட்கள் தயாரிப்பது குறித்து கிராமப்புற பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இவ்வாறு அன்றாடம் நாம் பயன்படுத்தி பின் தேவையில்லாமல் தூக்கி போட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத கைவினைப் பொருட்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் கூலித் தொழிலாளர்கள் மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கிராமப்புற பெண்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் கைவினை பொருட்களை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்துள்ளனர். இந்நிலையில் சிரட்டை மூலம் உணவு சமைக்கும் போது பயன்படுத்தப்படும் கரண்டி, குவளை, ஸ்பூன் மற்றும் பொம்மைகள் போன்ற கைவினைப் பொருட்களை பெண்கள் தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து கூடலூர் பகுதி பெண்கள் கூறும்போது, சுற்றுச்சூழல் மற்றும் மனிதனின் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தாத வண்ணம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்படுவதால் வரும் காலகட்டங்களில் இவற்றிற்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து இரண்டு மாத பயிற்சி பெற்ற பிறகு சிரட்டையில்  இருந்து பல்வேறு கலைநயம் மிக்க பொருட்களை உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் கைவினைப் பொருட்களை தயாரிக்க அதிக ஆர்வமாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |