Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அத்துமீரும் கேரள வாகனங்கள்….. பள்ளம் தோண்டி… பாதை மறைப்பு….. கிராம மக்கள் ஆவேசம்…!!

தர்மபுரி அருகே பொம்மிடி பகுதியின் எல்லைகளில் பள்ளம் தோண்டி வேற்று ஆட்கள் ஊருக்குள் வராமல் தடுத்ததற்கு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர்.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களை தவிர தர்மபுரி மாவட்டத்திற்கு பொம்மிடி பகுதி  வழியாக அவ்வபோது கேரள வாகனங்கள் வந்து செல்வதாகவும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொம்மிடி பகுதியின் எல்லை பகுதிகளில் பள்ளம் தோண்டி சாலையை துண்டித்து விட்டனர். இந்த தகவலையறிந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளம் தோண்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட , நோய் பரவலை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,

வெளிமாநில ஆட்கள் தொடர்ந்து உள்ளே வந்து நோய்த்தொற்றை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தியதால் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள்  தெரிவித்ததுடன், 20 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து பாதுகாப்பாக சென்று வரலாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |