ஸ்பெயினில் கடும் வெள்ளத்தில், 30 வருடங்களுக்கு முன் முழுவதுமாக மூழ்கிப் போன ஒரு கிராமம் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது.
ஸ்பெயின் நாட்டில் இருக்கும் Aceredo என்ற கிராமம், கடந்த 1992 ஆம் வருடத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போனது. அதாவது, ஒரு போர்ச்சுகீசிய நீர்மின் நிலையமானது, வெள்ளம் வெளியேறிக் கொண்டிருந்த கதவுகளை அடைத்ததால், லிபியா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, அதனை சுற்றி இருந்த கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது.
இதில், Aceredo என்ற கிராமம் ஒட்டுமொத்தமாக நீருக்குள் மூழ்கிப் போனது. இந்நிலையில், சுமார் 30 வருடங்கள் கழித்து நீர்மட்டம் குறைந்து அந்த கிராமத்தில் பாதிப்படைந்த மீதி பகுதிகள் வெளியில் தெரியத் தொடங்கியிருக்கிறது. அந்த கிராமத்தில் 70 குடியிருப்புகள் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.
அந்த குடியிருப்புகள் மட்டும் பாதிப்படைந்திருந்தாலும், தற்போது வரை இடிந்து போகாமல் அப்படியே இருக்கிறது. 30 வருடங்கள் நீருக்குள் மூழ்கினாலும் பல குடியிருப்புகளின் கூரைகள் தற்போதும் முழுவதுமாக சேதமடையாமல் இருக்கிறது. அந்த கிராமத்தில் சுமார் 120 மக்கள் வாழ்ந்து வந்தனர்.
அந்த சமயத்தில் மக்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். அதன்பின்பு ஒரு நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் குறைந்து இருக்கிறது. எனினும், சில பகுதிகளில் நீர் தேங்கி தான் இருக்கிறது. மேலும், அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் உபயோகித்த வாகனங்கள் மற்றும் பிற பொருட்களை அங்கே விட்டுச் சென்றிருந்தனர். அந்த பொருட்களும் அங்கு தான் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் அந்த கிராமத்தில் வாழ்ந்த பல மக்கள், அதற்கு அருகில் தற்போது வசிக்கிறார்கள்.
தற்போது, அந்த மக்கள் தங்கள் பழைய குடியிருப்புகளுக்கு செல்லலாம், எனினும் அவர்கள், அரிதான நிகழ்வுகளைக் காண விரும்பும் சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து தங்கள் கிராமத்திற்கு சென்று வீடுகள் மற்றும் பிற பொருட்களை காண்பிக்க முயற்சிக்கிறார்கள்.