கடந்த 25 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு அடிப்படை வசதிகள் கூட எங்கள் கிராமத்தில் செய்து தரவில்லை என்று கூறிதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து உள்ள சேரி என்னும் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரி இருபத்தைந்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதாகவும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் மாறி மாறி மனு கொடுத்து நொந்து போய் விட்டதாகவும் அந்த ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்து கூறுகின்றனர்
இதனையடுத்து தேர்தல் நெருங்குகின்ற இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முயற்சியாக அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தேன் கருப்பு கொடி ஏந்தி வில்லி சேரி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்த பேச்சுவார்த்தையில் கடந்த 25 ஆண்டுகளாக எங்களது கிராமத்திற்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை என்றும் இம்முறை அடிப்படை வசதிகள் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்
அதன்பின்பு 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அரசியல் கட்சிகளும் எங்களுக்கு உதவவில்லை இந்த நிலை மீண்டும் நீடித்தால் வருகின்ற மக்களவைத் தேர்தலை வில்லிச்சேரி கிராம பொதுமக்கள் முற்றிலுமாக நிராகரிப்போம் வாக்களிக்க மாட்டோம் என்று சவால் விடுத்து உள்ளனர் இது தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதனையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் தற்காலிகமாக கிராம மக்கள் கலைந்து சென்றுள்ளனர்