Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாட்டிக்கொண்ட விழுப்புரம்…! ”அதிர வைத்த கோயம்பேடு” 70 பேருக்கு கொரோனா …..!!

விழுப்புரத்தில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்திருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை திரும்பிய 27 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக விழுப்புரத்தில் 17 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் 17 ,அதே போல கடலூரை சேர்ந்த 8 பேருக்கும்,அரியலூரை சேர்ந்த்த 2 பேருக்கு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு காய்கறிச்சந்தை மூலமாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.  இதில் சென்னை 52 , அரியலூர் 22, விழுப்புரம் 20 கடலூர் 17, காஞ்சிபுரம் 7, பெரம்பலூர் 1 ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரத்தில் புதிதாக  17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |