விழுப்புரத்தில் ஜெயலலிதாவின் பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் பல்கலைகழகத்தை பிரித்து முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதை நிறைவேற்றும் விதமாக சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கட்டப்பட்ட பின்னர் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் கல்லூரிகள் அனைத்தும் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் நிர்வாக வசதிக்காக விழுப்புரத்தில் புதிதாக ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.