Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ரோட்டில் வாகனம் ஓட்டினால் தோப்புக்கரணம் – விழுப்புரம் போலீஸ் நூதன தண்டனை …!!

தேவையில்லாமல் ரோட்டில் வாகனம் ஓட்டியாவ்ர்களை விழுப்புரம் போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர்.

இந்தியாவில் வேகமாக வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றும் படியும் , யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களை வலியுறுத்தினார் இதனைத் தொடர்ந்து மாநிலங்களிலுள்ள மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளை தவிர ஏனைய அனைத்து முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலும் முழு ஊரடங்கு பின்பற்றப்படுகின்றது. ஊரடங்கை மீறி யாரும் வெளியே வந்தால் நடவடிக்கை என்று அரசு எச்சரித்துள்ளது. இதனையடுத்து விழுப்புரத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் ரோட்டில் தேவையில்லாமல் சுற்றிய வாகன ஓட்டிகள் 4 பேரை தோப்புக்கரணம் போட்டுவிட்டு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories

Tech |