Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வசமாக சிக்கிய விழுப்புரம்…! ”இன்று மட்டும் 40 பேர்” கோயம்பேடு மூலம் 73 பேருக்கு கொரோனா …!!

விழுப்புரத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை 20 பேருக்கு கொரோனா உறுதி செயப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரம் செய்வதற்கும், வேலை செய்வதற்கும் சென்று வந்தவர்கள் என்று கண்டறிப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தை தொடர்புடைய 7000 பேரை கண்டறியும் முயற்சி நடைபெற்று வருகின்றது. அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் மையங்களில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்றவர்கள், அவர் குடும்பத்தை சார்ந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சோதனை என்பது நடைபெற்று வருகின்றது. விழுப்புரத்தில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 73 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |