Categories
மாவட்ட செய்திகள்

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு…. இயக்கப்பட்ட ரயில் சேவைகள்…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து ரயில் சேவைகள் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு தினமும் காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணிக்கும் இதேபோன்று வேறொரு பாதையில் மயிலாடுதுறைக்கு விழுப்புரத்திலிருந்து காலை 6 மணி, நண்பகல் 2.45 மணி, மாலை 6 மணி என மூன்று வேளைகளும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

தற்போது விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை இடையே ரயில் சேவைகள் மீண்டும் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே பயணிகள் ரயில்கள் தினமும் மூன்று வேளைகள் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நவம்பர் 10 ஆம் தேதியிலிருந்து அதிவேக ரயிலாக தினமும் ஒருமுறை இயக்கப்படும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இதன்படி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே நேற்று முதல் ரயில் போக்குவரத்து சேவைகள் துவங்கியது.

குறிப்பாக நேற்று 3வது நடைமேடையில்  7 பெட்டிகளுடன் காலை 6 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட அதிவேக பயணிகள் ரயில் புறப்பட்டுள்ளது. இது காலை 9.10 மணியளவில் மயிலாடுதுறை வந்தடைந்துள்ளது. இதே போல் வேறொரு பாதையில் மயிலாடுதுறையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட அதிவேக பயணிகள் ரயில் விழுப்புரத்திற்கு இரவு 9.10 மணிக்கு வந்தடைந்தது. குறிப்பாக ரயில் சேவைகள் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |