Categories
சினிமா தமிழ் சினிமா

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார்…. சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்…. வலைதளங்களில் வெளியான காணொளி….!!

விமான நிலையத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்துள்ள காணொளியானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்து வருகிறார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இதனையடுத்து படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிகர் சிம்பு பார்ப்பதற்கு மிகவும் இளமையாக காட்சியளித்தார். இதற்காக சிம்பு 15 கிலோ வரை  உடல் எடையை குறைத்துள்ளார் என்று தகவல் கசிந்தது. இந்த நிலையில் நடிகர் சிம்பு விமான நிலையத்திற்கு வரும் பொழுது ரசிகர்கள் அவரை சுற்றி சூழ்ந்துள்ள காணொளியானது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Categories

Tech |