Categories
உலக செய்திகள்

‘யாரும் பயப்பட வேண்டாம்’…. விமான நிலையத்தில் பேசிய தலீபான்கள்…. வைரலாகும் காணொளி காட்சி….!!

விமான நிலையத்தில் கூடியிருந்த மக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த ஒருவர் பேசும் காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கின்றனர். இதனால் காபூல் விமானத்திலேயே பொதுமக்கள் முகாமிட்டு காத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் விமான நிலையத்தில் திரண்டிருக்கும் பொதுமக்கள் முன்பு தலீபான்கள் அமைப்பச் சேர்ந்த ஒருவர் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது “இது நமது அனைவரின் வீடு. எதற்காகவும் யாரும் பயப்பட வேண்டாம். மேலும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம். தங்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என்று கூறியுள்ளார். இந்த காணொளி காட்சியானது தற்பொழுது சமூக வலைதளங்களில் அனைவரிடமும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Categories

Tech |