ஜப்பானிலிருந்து செல்லும் 100க்கும் மேலான விமானங்கள் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலவும் வானிலை மாற்றத்தால் ரத்து செய்யபட்டுள்ளது.
ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் மிகவும் மோசமான மற்றும் பனிப்பொழிவு காலநிலை நிலவி வருகிறது. இதனால் ஜப்பானிலிருந்து அந்நாட்டின் வட கிழக்கு பகுதிக்கு செல்லும் சுமார் 100க்கும் மேலான விமானங்கள் காலநிலை மாற்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஜப்பானில் இயங்கி வரும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்நாட்டின் வடகிழக்குப் பகுதியில் நிலவி வரும் காலநிலை மாற்றத்தை முன்னிட்டு சுமார் 35 விமானங்களை ரத்து செய்துள்ளது.
மேலும் ஜப்பானில் இயங்கி வரும் பிரபல ஏ.என்.ஏ நிறுவனமும் அந்நாட்டின் வடகிழக்கு பகுதிக்கு செல்லும் சுமார் 75 விமானங்களை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இந்த அதிரடி உத்தரவால் சுமார் 5,000 த்துக்கும் மேலான பயணிகள் மிகவும் கடுமையாக அவதியுற்றுள்ளார்கள்.