Categories
உலக செய்திகள்

எரிமலைக்குள் 32 அடி வரை சென்ற விமானி…. ஓராண்டாக எடுக்கப்பட்ட பயிற்சி…. சில வினாடிகளில் நடத்தப்பட்ட சாதனை….!!

தென் அமெரிக்க நாட்டில் விமானி ஒருவர் கடந்த ஓராண்டாக எடுத்த தீவிர பயிற்சியின் விளைவாக எரிமலையின் வாய்க்குள் 32 அடி ஆழம் வரை சென்று சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

தென்னமெரிக்க நாடாக சிலியா திகழ்கிறது. இந்த சிலிய நாட்டை சார்ந்த முன்னாள் விமானியான செபாஸ்டியன் கடந்த ஓராண்டாக எரிமலைக்குள் புகுந்து வெளியேறுவதற்கு பயிற்சி எடுத்துள்ளார்.

அவர் எடுத்த பயிற்சியின் விளைவாக தற்போது 200 மீட்டர் விட்டமுடைய எரிமலை ஒன்றிற்குள் 32 அடி ஆழம் வரை சென்றுள்ளார்.

அதன்பின் 32 அடி ஆழம்வரை சென்ற விமானி மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் எரிமலையின் வாய்க்குள் இருந்து வெளியேறியுள்ளார். இந்த சாகசத்தை விமானி சில வினாடிகளிலேயே செய்துள்ளார்.

Categories

Tech |