Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விமான நிலைய விரிவாக்கம்… நிலம் அளவிடும் பணி தொடக்கம்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

விமான நிலைய விரிவாக்க பணிக்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு பணி தொடங்கப்பட்டு வந்த நிலையில் அதிகாரிகள் அதனை ஆய்வு மேற்கொண்டனர்.

சேலம் விமான நிலையம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்ட காமலாபுரம், சிக்கம்பட்டி, பொட்டிபுரம், தும்பி பாடி போன்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த 3 வருடங்களுக்கு மேலாக மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலமாக சேலத்திலிருந்து சென்னைக்கு “ட்ரூஜெட்” விமான சேவை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக காமலாபுரம், சிக்னம்பட்டி, பொட்டிபுரம், தும்பிபாடி போன்ற 4 ஊராட்சிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. இவற்றில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் வீடுகள், தென்னை மரங்கள் மற்றும் அந்த நிலங்களில் அப்போதைய நிலவரங்கள் குறித்து கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர். இதனையடுத்து சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா பரவல் காரணமாக அந்த பணி கிடப்பில் கிடந்தது . இதனிடையில் தற்போது விமான நிலையம் விரிவாக்கம் பணிக்காக நிலம் அளவீடு தொடங்கியிருக்கின்றது. இதனை விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் சிக்கணம்பட்டி, பொட்டிபுரம் போன்ற ஊராட்சிகளில் ஏற்கனவே கணக்கிடு செய்யப்பட்ட விவரங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு வெளி மார்க்கெட் அளவில் நிலத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |