Categories
உலக செய்திகள்

விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் …. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம் ….!!!

ஈராக்கில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் தன்னாட்சி பெற்ற குர்திஷ் மாகாணத்தின்  தலைநகரான எர்பிளில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா நேட்டோ படைகள் தங்களுடைய படையினரை நிலைநிறுத்தியுள்ளது . ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று எர்பிள் விமான நிலையத்தில் ட்ரோன் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் விமான நிலையத்தை குறிவைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக குர்திஷ் மாகாண பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஐஎஸ் தீவிரவாதிகள் அல்லது ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |