Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய விமானம்…. 3 பேரின் உடல்கள் மீட்பு…. தீவிர விசாரணை நடத்தும் போலீசார்….!!

விமான விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா  நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள வெர்ஜினியாவில் பீச் கிராஃப்ட் சி-23 எனும் விமானம் பாயெட் விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  சார்லஸ்டன் எனும் பகுதியில் தென்கிழக்கு திசையில் சுமார்  50 மைல்  தொலைவில் அமைந்துள்ள நியூ ரிவர் கோர்ஜ் பாலத்தின் அருகில் விமானம் தனது கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இதனால் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |