விமான விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிழக்கு ரஷ்யாவின் தலைநகரான இர்குட்ஸ்க் பகுதியில் விமான விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் எல்-410 வகை விமானம் ஒன்று தரை இறங்கும் பொழுது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்துள்ளனர்.
அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.