Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுக்குள் விழுந்த விமானம்…. 6 பேர் பலி…. அறிக்கை வெளியிட்ட போலீசார்….!!

விமானம் காட்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் விமானப்படையை சேர்ந்த விமானம் ஒன்று இரண்டு ராணுவ விமானிகள் மற்றும் நான்கு பொதுமக்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது. மேலும் விமானமானது அமேசான் காடுகளின் வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக விபத்து நடந்தது குறித்து பெனி பிராந்திய  பகுதியை சேர்ந்த போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “விமானமானது அடர்ந்த மரங்களின் நடுவில் விழுந்துள்ளதால் தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் அந்த தீயை அகுவா டல்ஸ்  சமூகத்தை சேர்ந்தவர்கள் அணைக்க முயற்சித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |