புற்களை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளம்பெண் மீது சிறிய வகை விமானம் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் மொன்றியல் பகுதிக்கு வடக்கே விமான ஓடுதளம் ஒன்று உள்ளது. இந்த ஓடுதளத்தின் அருகில் 27 வயதுடைய இளம் பெண் ஒருவர் புல் வெளி சமப்படுத்தும் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியில் இருக்கும் புற்களை சமன்படுத்தி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் விமான ஓடுதளத்தில் தரையிறங்குவதற்காக வந்த சிறிய வகை விமானம் ஒன்று அப்பெண்ணின் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்தில் சிக்கிய அந்த இளம்பெண்ணை அருகில் இருப்பவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில் “இந்த விபத்து எப்படி நடந்தது என அறிய பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகும். மேலும் இந்த சம்பவத்தைக் கண்ட விமானியும் அதிர்ச்சிக்குள்ளானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளனர்.