விமானத்தில் ஆடைகளை கழற்றி ரகளை செய்த பெண்ணை விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
Vladivostok என்ற பகுதிக்கு ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையில் அங்குமிங்கும் நடந்துள்ளார். பிறகு தனது ஆடைகளை கழற்றி கழற்றி அணிந்துள்ளார். விமானக் குழுவினர் எச்சரித்தும் கேட்காமல் அவர் தனது ஆடை முழுவதையும் கழட்ட முயன்றுள்ளார். இதனை பார்த்து விமான பணிப்பெண்களும் பயணிகளும் அந்தப் பெண்ணை பிடித்து இருக்கையில் வைத்து கட்டி வைத்துள்ளனர்.
பின்னர் tolmechevo விமானநிலையத்தில் விமானம் தரை இறங்கிய போது பெண்ணை விமானத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதற்கு பின்பு அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் Synthetic drug என்ற போதைப்பொருளை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டார் .
பின்னர் அந்தப் பெண் பயன்படுத்திய Synthetic drug போதை பொருளின் அளவை கண்டறிவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் . இந்த தகவலை ரஷ்ய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது . மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.