Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விமானப்படை பொன்விழா…. வீரர்களின் பேரணி…. போலீஸ் சூப்பிரண்டு நினைவுப் பரிசு….!!

விமானப்படை பொன்விழா வருடத்தை முன்னிட்டு வீரர்கள் சைக்கிளில் பேரணி வந்ததால் காவல்துறை சூப்பிரண்டு நினைவு பரிசு வழங்கியுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள கீழ வீதி பகுதியில் இந்திய விமானப்படையில் பொன்விழா வருடத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் 16 பேர் அடங்கிய குழுவினர் சைக்கிளில் பேரணியாக தஞ்சாவூரில் இருந்து மகாபலிபுரம் வரை சென்றனர். இந்நிலையில் செல்லும் வழியில் இம்மாவட்ட துணை காவல்துறை சூப்பிரண்டு ரமேஷ்பாபு அவர்களை வரவேற்று நினைவு பரிசு வழங்கியுள்ளார். இதில் விமானப்படை வீரர்கள் கூறும் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 1971-ஆம் வருடம் நடந்த போரில் விமானப்படை உதவியுடன் இந்தியா வெற்றி அடைந்துள்ளது.

இதனை கொண்டாடுகின்ற விதமாக பொன்விழா வருடத்தை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விமானப்படையின் கமாண்டர் அணித்தலைவர் உபாத்யா மற்றும் அணியின் துணைத் தலைவர் சைலேந்திர சிங் ஆகியோர் தலைமையில் நாங்கள் 700 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிளில் பேரணி செல்கின்றோம். இதனையடுத்து தற்போது சிதம்பரத்தில் தங்கிவிட்டு அடுத்து புதுச்சேரிக்கு புறப்பட இருக்கிறோம். இதனைத் தொடர்ந்து மகாபலிபுரம் சென்று பின் அங்கிருந்து தஞ்சாவூருக்கு செல்வோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |