விமான நிலையத்தில் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி 4.20 கிலோ தங்கத்தை இலங்கைக்கு கடத்த மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு 2.30 கோடி ரூபாய் ஆகும். இதனை தொடர்ந்து தங்கம் கடத்தல் தொடர்பாக பிடிக்கப்பட்ட பயணியிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.