Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் பயணித்த விமானத்தில்… முதல் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த விமானி… முதலமைச்சர் பாராட்டு…!!

விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு திரும்பினார்.

அப்போது அவர் சேலம் விமான நிலையத்திலிருந்து தனியார் ட்ருஜெட் விமானம் மூலம் பயணித்தார். அந்த  விமானத்தில் இதுவரை இல்லாத விதமாக  முதல் முறையாக விமானி தமிழில் அறிவிப்பு செய்தார். மேலும் இன்று புறப்படும் விமானத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னைக்கு  செல்வதை கேள்விப்பட்ட விமானி  தனது மனைவிக்கு பிரசவ நாள் என்பதையும் பொருட்படுத்தாமல் விமானத்தை சென்னைக்கு  அவர் இயக்கியுள்ளார்.

இதையடுத்து விமானத்தில் முதன் முதலில் தமிழில் அறிவிப்பு செய்த விமானி கோபிநாத்தை முதலமைச்சர் மனதார  பாராட்டினார். அந்நேரத்தில் விமானிக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் பாராட்டு பெற்ற தலைமை விமானி கோபிநாத் சேலம் மாவட்டத்திலுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர். இவர் 2011- 2012 சேலம் விமான பயிற்சி பள்ளியில் பணியாற்றியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் விமானத்தில் முதன் முறையாக தமிழில் அறிவிப்பு செய்த விமானியின் செயல் தமிழ் ஆர்வலர்கள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.

Categories

Tech |