பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்ததால் ஒலிபெருக்கி மூலமாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயக சதுர்த்தி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கமாக இருக்கிறது. இந்த விழாவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து விடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி வருகின்ற 10-ஆம் தேதி வர இருக்கிறது.
இதனை அடுத்து இந்த வருடம் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. பின்னர் வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான லக்கிநாயக்கன்பட்டி, மேல் சிறுவள்ளூர், புதுப்பட்டு, புதூர் கூட்டு சாலை, பிரம்ம குண்டம் ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களில் வசிக்கும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர்.