ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அந்த நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட உள்ளது. பொதுவாகவே விநாயகர் அவதரித்த, பிறந்தநாளை தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் விநாயகரை வேண்டி விரதம் இருக்க உகந்த நாள் ஆகும்.
இந்த நன்னாளில் விநாயகர் கடவுளை வணங்கி உங்களுக்கு வேண்டிய வரத்தை கொடுப்பார் என்பது நடைமுறை. தோஷங்கள்,கடன் தொல்லை மற்றும் குழந்தை இல்லா தம்பதிகள் என அனைவரும் இந்த நன்னாளில் விரதம் இருந்து பிள்ளையாரை வழிபடலாம். அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தினால் வெகு விமர்சையாக கிட்டத்தட்ட பத்து நாட்கள் நடைபெறும். இந்த நன்னாளில் வரலாறு பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது குறித்து இதில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக பிள்ளையார் கோவில் குளக்கரையில் தான் அமைந்திருக்கும்.புராண கதையின்படி சிவனின் மனைவியான பார்வதி தேவி ஒருநாள் குளிப்பதற்காக குளக்கரைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு காவலுக்கு யாரும் இல்லை என்பதால் தான் கொண்டு வந்த மஞ்சள் கொத்தை குலைத்து ஒரு ஆண் குழந்தை உருவத்தை பிடித்து அதற்கு உயிர் கொடுத்தார்.அப்படி பார்வதி தேவியால் உயிர் கொடுக்கப்பட்ட அந்த உருவம் தான் அவருடைய பிள்ளையாகி விட்டது.
பின்னர் அந்த குழந்தையிடம் நான் குளிக்க செல்கிறேன் யார் வந்தாலும் உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது என்று கூறிவிட்டு சென்றார். அப்போது திடீரென அங்கே வந்த சிவபெருமான் உள்ளே நுழைய முயன்ற போது பிள்ளையார் உள்ளே அனுமதிக்கவில்லை. சிவபெருமான் எவ்வளவு எடுத்துக் கூறியும் தன் தாய் உத்தரவை யாரும் மீற முடியாது எனக் கூறி சிவனை தடுத்து நிறுத்தினார். இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிள்ளையாரின் தலையை துண்டித்து விட்டு உள்ளே சென்றார்.
பின்னர் பார்வதி தேவி நீராடி முடித்து வந்து பார்த்தபோது பிள்ளையாருக்கு தலை இல்லாததை கண்டு கோபமும் ஆவேசமும் அடைந்து சிவனிடம் விசாரித்தார்.பின்னர் நடந்ததை சிவபெருமான் கூறிய நிலையில் மனமடைந்த பார்வதி தேவி தான் உருவாக்கிய குழந்தையை நினைத்து அழுது புலம்பினார். மீண்டும் அதற்கு உயிர் தரும்படி சிவபெருமானிடம் கதறினார். அதனால் பூதக்கணங்களை அனுப்பி , எந்த ஒரு குழந்தை தாய் வேறு திசை நோக்கியும், பிள்ளை வடக்கில் தலை வைத்து படுத்து இருக்கிறதோ அதன் தலையை வெட்டி எடுத்து வாருங்கள் என உத்தரவிட்டார்.
அவர் கூறியதைக் கேட்டு தேவர்கள் வட திசையை நோக்கி சென்ற போது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் கிடைத்தது. தேவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று சிவனிடம் கொடுத்த நிலையில் யானையின் தலையை வெட்டுப்பட்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிர் கொடுத்தார். இதனைப் பார்த்ததும் பார்வதி தேவி மனம் நெகிழ்ந்து சாந்தமடைந்தார்.இதனைத் தொடர்ந்து தான் அந்தப் பிள்ளையாருக்கு கணேசன் என பெயர் வைத்து கமது தேவர்களுக்கு தலைவராக நியமித்ததாக புராணத்தில் கூறப்படுகிறது. இதுவே பிள்ளையாரின் அவதார கதையாக புராணங்களில் கூறப்படுகிறது.