விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக 1 அடி உயரம் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சிலை 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலையை வைத்தல் மற்றும் ஊர்வலம் எடுத்து செல்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை அரசு நீக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை மற்றும் போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தடையினால் பெரிய அளவில் உள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தஞ்சை பூக்காரத் தெரு பகுதியில் சாலையோரத்தில் அதிக அளவில் 1 அடி உயரத்தில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் எளிதில் வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்யவும், நீர்நிலைகளில் கரைக்கும் வகையில் சிலைகள் வர்ணம் பூசாமல் களிமண்ணால் தயார் செய்யப்பட்டும் வருகிறது.