Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா…. நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…!!

விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவராஜ் தலைமை வகித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, நீர் நிலைகளில் கரைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளிலேயே பண்டிகையை கொண்டாட வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது இந்து சமய அறநிலைய துறை மூலம் சிலைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின் கட்டுப்பாடுகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |